XBB Omicron வேரியன்ட் வைரஸ் கடுமையானதென வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகள் தவறானவை : சுகாதார அமைச்சகம் !

covid-19 update

XBB Omicron வேரியன்ட் வைரஸ் கடுமையானதென்றும் இறப்பு நிகழ்வுகளில் வேகமான மற்றும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகள் தவறானவை என சுகாதார அமைச்சகம் (MOH) அக்டோபர் 11 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  MOH இந்த வதந்திகளுக்கு எதிராக POFMA சட்டத்தின் மூலம்  பாதுகாப்பை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.

வார இறுதியில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மோசமான  வழக்குகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. மேலும் இது தடுப்பூசி மற்றும் முந்தைய தொற்று அலைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட எதிர்ப்புசக்திகளின் காரணமாக இது சாத்தியம் என சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது. மேலும் சுகாதார அமைச்சகம் இதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

அதுபோல, XBB Omicron வேரியன்ட் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மையான நோயாளிகள் தொண்டை வலி அல்லது லேசான காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகளையே தொடர்வதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அக்டோபர் 11 நிலவரப்படி, 11 ICU வழக்குகள் மற்றும் 50 ஆக்சிஜன் சப்ளிமெண்ட்கள் தேவை என்ற நிலையில் உள்ளது. இது கடந்த சில மாதங்களில் காணப்பட்ட அளவை விட சற்று அதிகம் தான். ஆனாலும், டெல்டா மற்றும் ஓமிக்ரான் அலைகளின் உச்சத்தின் போது வழக்குகள் மிக அதிகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.