‘நட்பில்லா’ நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்த்துள்ளது ரஷ்யா!

russia-names-singapore-list-unfriendly
(PHOTO: Travel with Jane)

ரஷ்யாவுக்கும், அதன் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கும் எதிராக நட்பில்லா நடவடிக்கைகளை செய்யும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியலில் சிங்கப்பூரை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது மாஸ்கோ.

சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் பட்டியலில் இருப்பதாக TASS என அழைக்கப்படும் ரஷ்ய செய்தி நிறுவனம் நேற்று (மார்ச் 7) தெரிவித்தது.

#Exclusive: சிங்கப்பூரில் தமிழக ஊழியரை 3 மாதங்களாக காணவில்லை: “எப்டியாவது கண்டுபிடிச்சி தாங்க” கண்ணீருடன் பெற்றோர்!

அந்த பட்டியலில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுனைடெட் கிங்டம், உக்ரைன், மாண்டினீக்ரோ, சுவிட்சர்லாந்து, அல்பேனியா, அன்டோரா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, நார்வே, சான் மரினோ, வடக்கு மாசிடோனியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மைக்ரோனேஷியா, நியூசிலாந்து, மற்றும் தைவான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கடந்த மாதம் பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா தொடங்கியது.

அதனை அடுத்து ரஷ்யாவிற்கு எதிராக பரந்த அளவிலான தடைகளை அறிவித்த பல நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.

Employment Pass அனுமதி புள்ளி முறையில் ஏதேனும் தந்திரம் செய்ய முயற்சித்தால் அதிக கடும் நடவடிக்கை…!