Omicron -ன் உருமாறிய திரிபுகள் தோன்றினாலும் சிங்கப்பூர் தனது எல்லைகளை திறந்து வைத்திருக்கும் – எஸ் ஈஸ்வரன்

தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசின் ஆதரவு எப்போதும் உண்டு - அமைச்சர் ஈஸ்வரன்

கடந்த வாரம் Covid-19 வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடுகள் சிங்கப்பூரில் மூன்று நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.Omicron வைரஸின் உருமாறிய திரிபுகள் கண்டறியப்பட்டாலும் ,சிங்கப்பூர் தனது எல்லைகளை திறந்து வைத்திருக்கவும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இருக்கவும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

புதன்கிழமை (May 18) ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் எஸ் ஈஸ்வரன் அளித்த பேட்டியில் கடந்த காலங்களிலிருந்து Covid-19 மாறுபாடுகளை எவ்வாறு கையாள்வது என்பதை சிங்கப்பூர் கற்றுக்கொண்டதாக கூறினார். உலக சுகாதார நிறுவனத்தால் கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்ட ஓமிக்ரோன் பரவத் தொடங்கிய போது சிங்கப்பூர் அதன் மீளத்திறக்கும் திட்டங்களில் இருந்து பின்வாங்கவில்லை .

டெல்டா மாறுபாடு தாக்கியபோது சிங்கப்பூர் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகள் வேறுபட்டு இருந்ததாகவும் ஆனால் ஓமிக்ரோன் தாக்கியபோது மீளத்திறக்கும் திட்டங்களிலிருந்து பின்வாங்காமல் மாறாக எவ்வாறு தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்ததாக கூறினார்.

Covid-19 தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து எல்லைகளை மீண்டும் திறந்த ஆசியாவின் முதல் நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும். சுகாதார கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு ,சாங்கி விமான நிலையம் தற்போது தேவைக்கேற்றவாறு செயல்பட்டு வருகிறது.“ இது மாற்றத்திற்கான சவால் ” என்று ஈஸ்வரன் குறிப்பிட்டார். விமான நிலைய பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து கடினமாக உழைத்து வருவதாக தெரிவித்தார்.