S Pass, Employment Pass தகுதி சம்பள உயர்வு… வெளிநாட்டு ஊழியர்களின் கட்டாய சம்பள உயர்வுக்கு வழிவகுக்குமா?

Employment Pass New points system

Employment Pass (EP) மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கான தகுதி சம்பள உயர்வுவானது வரும் செப்டம்பர் முதல் நடப்புக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இது வெளிநாட்டு ஊழியர்களுக்கு “கட்டாய” சம்பள உயர்வு ஏற்படக்கூடும் என்று Ms Foo Mee Har கூறினார்.

“ஊழியர்களை இதற்காக தொந்தரவு செய்யக்கூடாது!”… மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் MOM

Work pass முறையை மிகவும் வெளிப்படையானதாகவும், சிக்கனமான தேவைக்கு ஏற்பவும் மாற்ற, சம்பளம் அல்லாத பல காரணிகளைக் கருத்தில் கொண்டு புள்ளி முறை விவரங்களை அவர் பரிந்துரைத்தார்.

மேலும் வலுவான ஊழியர் சந்தையுடன், அதிக சம்பள முறை முதலாளிகளை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய மாற்றங்கள் மூலம், வரும் செப்டம்பர் மாதம் முதல் புதிய EP மற்றும் S Pass விண்ணப்பதாரர்களுக்கான தகுதிச் சம்பளம் S$500 உயரும்.

நிதிச் சேவைத் துறையில், புதிய EP விண்ணப்பதாரர்களுக்கு தகுதிச் சம்பளம் S$5,000 இல் இருந்து S$5,500 ஆக உயர்த்தப்படும். இந்தத் துறையில் உள்வரும் S Pass வைத்திருப்பவர்களுக்கு S$3,500 சம்பளம் அறிமுகப்படுத்தப்படும்.

பழைய EP மற்றும் S Pass விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் அதிக சம்பள கட்-ஆஃப்கள் ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தப்படும். அவர்கள் இதற்கு புதுப்பித்த ஒரு வருடம் கழித்து, அதாவது செப்டம்பர் 2023 முதல் உயரும் என கூறப்பட்டுள்ளது.

சொந்த நாட்டுக்கு செல்லவிருந்த அன்றைய தினமே விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!