சிங்கப்பூருக்கு வரும் S pass வைத்திருப்பவர்கள் ஊருடன் ஒன்றி வாழ புதிய திட்டம்

E Pass applications mom 43 சதவீத ஊழியர்களுக்கு 3 முறை அனுமதி கிடைத்துள்ளது

சிங்கப்பூருக்கு வரும் S pass வைத்திருப்பவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிவதைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் உள்ளூர் மக்களுடன் நேர்மறையான தொடர்புகளை ஊக்குவிப்பதற்கும் முன்னோடித் திட்டம் ஒன்று அடுத்த ஆண்டு 2023ல் தொடங்கப்பட உள்ளது.

தற்போது S Pass வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயமில்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பணப் பையை தொலைத்த ஓட்டுநர்: $300 வரை ரொக்கம், ஓட்டுநர் உரிமம் இருந்ததாக தகவல் – கண்டறிய உதவுங்கள்

உலகளாவிய திறன் உத்திகளை உருவாக்குவது குறித்து எம்பி ராஜ் ஜோசுவா தாமஸின் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் டான் இந்த திட்டத்தை வெளிப்படுத்தினார்.

திரு தாமஸ் தனது உரையில்; சிங்கப்பூரின் சட்டங்கள், கலாச்சாரம் மற்றும் உள்ளூர் சக ஊழியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அனைத்து வெளிநாட்டினருக்கும் பணி அனுமதிச் சீட்டுகளில் கட்டாயத் தொடக்கத் திட்டத்தை பரிந்துரைத்தார்.

ஆனால், இந்த திட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதையும் டாக்டர் டான் விளக்கவில்லை.

வரும் காலங்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஆறு சக்கர லாரி மோதி சிங்கப்பூரர் பலி: “பைக் ஓட்ட வேண்டாம்” – பெற்றோர் போட்ட கட்டளையை மீறியவரின் சோக முடிவு