S Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்வு..!

Pic: Today/ File

சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் 01, 2022 முதல் S Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் S$ 2,500-லிருந்து S$3,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

S Pass மற்றும் E Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் கடந்த செப்டம்பர் 01, 2020 அன்று கடைசியாக உயர்த்தப்பட்டது.

புதிய S Pass விண்ணப்பங்களுக்கு தகுதி பெறும் குறைந்தபட்ச ஊதியம் S$3,000ஆகவும் மற்றும் நிதிச் சேவைத் துறையில் S Pass விண்ணப்பங்களுக்கு தகுதிபெறும் குறைந்தபட்ச ஊதியம் S$3,500ஆக நிர்ணயிக்கப்படும் என்றும், S Pass வைத்திருக்கும் மூத்த ஊழியர்களின் தகுதிப்பெறும் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய S Pass விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமும் மற்றும் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் மீண்டும் உயர்த்தப்படும் என்றும், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

இரட்டையர் மரணம்: தந்தை மீது இரண்டாவது கொலைக் குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் ஆஜர்