S Pass க்கு பதிலாக இந்திய ஊழியர்கள் உட்பட சில வேலைகளில் உள்ள ஊழியர்களுக்கு Work permit அனுமதி!

Roslan Rahman/AFP

S Pass தகுதிச் சம்பளம் உள்ளூர் இணை தொழில் வல்லுநர்கள் மற்றும் Technicians என்னும் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஊதியத்திற்கு ஏற்றவாறு உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில வேலைகளில் உள்ள ஊழியர்களை S Pass க்கு பதிலாக Work permit அனுமதியில் முதலாளிகள் வேலைக்கு எடுக்கலாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) தெரிவித்தார்.

JUSTIN: இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

S Pass குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் இந்த செப்டம்பரில் S$3,000 ஆக உயரும், மேலும் 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தகுதிச் சம்பளம் மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

S Pass என்பது சிறப்புப் வேலைகளை செய்யும் நடுத்தர திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கானது. உள்ளூர் ஊதியத்தின் மூன்றில் ஒரு பங்கின் அடிப்படையில் இது அமையும்.

வணிகங்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, இந்த சம்பள அதிகரிப்பு மூன்று கட்டங்களாக செய்யப்படும் என்று டாக்டர் டான் கூறினார்.

இப்படி பண்ணா வெளிநாட்டு ஊழியர்கள் மேல எப்படி நம்பிக்கை, கருணை வரும்…!

Work permit அனுமதியில் வேலை

ஆனால், அடுத்த ஆண்டு செப்., 1ல், அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டவுடன், Work permit அனுமதியில் ஊழியர்களை சில வேலைகளுக்கு அமர்த்த நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

இதில் இந்திய உணவகங்களில் சமையல்காரர்கள், உணவு பதப்படுத்தும் ஊழியர்கள், வெல்டர்கள் மற்றும் ஃபிளேம் கட்டர்கள், ரிகர்கள் மற்றும் கேபிள் ஸ்ப்ளிசர்கள் மற்றும் உற்பத்தி மற்றும் பொறியியல் நிறுவனங்களில் உள்ள பிற ஊழியர்களும் அடங்குவர்.

இந்த work permit ஊழியர்களை இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலாளிகள் எடுக்கலாம்.

சில முதலாளிகள் இந்த நாடுகளில் இருந்து work permit -க்கு பதிலாக S Pass -ல் உடலுழைப்பு வேலைக்கு எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அடுத்த ஆண்டு செப்., 1 முதல் மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் நுழைய சுமார் 348,518 பயணிகளுக்கு “Vaccinated travel pass” அனுமதி…!