சிங்கப்பூரில் சொத்து நிர்வாகத்துறையில் ஊதிய உயர்வு – கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலையில் பணியாளர்கள்

Steve Ding/Unsplash

சிங்கப்பூரின் சொத்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை ஏற்பதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.மேம்பட்ட வேலை,ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு வழிசெய்யும் இந்த ஏற்பாட்டுக்கு வர்த்தகச் சங்கங்களும் நிறுவனங்களும் கைகொடுக்கவிருக்கின்றன.பணியாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண சிங்கப்பூர் வர்த்தக்கூட்டமைப்பும் அதன் பங்குதாரர்களும் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்

சொத்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை நிலையான வகையில் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஏழு நிறுவனங்களை ஈடுபடுத்தியதாகக் கூட்டமைப்பு தெரிவித்தது.இவை பணியாளர்களுக்கு வேலைகளை மறுவடிவமைத்து புதிய திறன்களைக் கற்பித்தன.கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தாண்டு மே மாதம் வரை ‘Lighthouse Project’ என்ற திட்டத்தின் கீழ் 10 முன்னோடித் திட்டங்கள் சோதிக்கப்பட்டன.கிட்டத்தட்ட 50 பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பாதுகாப்பு,வாடிக்கையாளர் சேவை,துப்புரவு பணியாளர்கள்,மின்சாதனப் பராமரிப்பு போன்றவற்றில் பயிற்சி பெற்றனர்.இத்தகைய திட்டத்தால் பணியாளர்கள் திறன் மேம்பாடு,கூடுதல் ஊதியம் எனப் பயனடையும் வேளையில்,நிறுவனங்களின் உற்பத்தியையும் அதிகரிக்கக் கூடும்.

முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் நம்பிக்கையும் அணுக்கமான தொடர்பும் முக்கியம் என்று முன்னோடித் திட்டத்தில் கலந்து கொண்ட நிறுவனத்தினர் கூறுகின்றனர்.