ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு – லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களானு செக் பண்ணிக்கோங்க!

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

குறிப்பிட்ட துறையில் அனைத்து வேலை பிரிவுகளிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு நான்கு முதல் 15 சதவீதம் வரை சம்பள உயர்வை பரிந்துரைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தால் (MSF) இந்த சம்பள வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்: யார் அவர் விசாரணை..

அதாவது சமூக சேவைத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் அந்த சம்பள உயர்வு வழிகாட்டுதல்கள் பொருந்தும்.

இது அடுத்த மாதம் ஏப். 1, 2023 முதல் அமலுக்கு வரும் எனவும் MSF தகவல் கூறியுள்ளது.

எதிர்காலத்தை இலக்காக கொண்டு செயல்படும் சமூக சேவைத் துறைக்கான ஆதரவை மேம்படுத்துவதற்கான அமைச்சகத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சம்பள உயர்வு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.