வெளிநாட்டு ஊழியரிடம் அதிக தொகை பெற்றுக்கொண்ட சலூன் – போலீசில் புகார்

Salon overcharge foreign worker
Photo from employer via Mothership

முடி திருத்தம் செய்துகொண்ட வெளிநாட்டு ஊழியரிடம் அதிக தொகை பெறப்பட்டு அவர் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பூன் லே ஷாப்பிங் சென்டரில் முடி திருத்தம் செய்ய S$1,450 வெள்ளியை அவர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விலை பட்டியல்

அந்த ஊழியர், ஆர்கானிக் சலூன் கடையின் கண்ணாடி கதவில் ஒட்டப்பட்ட விலை பட்டியலை பார்த்துள்ளார், அதில் முடி திருத்தம் செய்ய கட்டணம் S$2 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை பார்த்த ஊழியர், முடி வெட்டவும் மற்றும் முடி சிகிச்சை (hair treatment) செய்துகொள்ளவும் முடிவு செய்தார்.

இந்த சம்பவம் ஜூலை 22 அன்று நடந்ததாக மதர்ஷிப்பிற்கு ஊழியரின் முதலாளி கூறியுள்ளார்.

முதலாளியின் கூற்றுப்படி, முடி திருத்தம் (S$45), ஸ்டைலிங் (S$45) கலரிங் (S$39) மற்றும் உச்சந்தலை சிகிச்சைக்காக (scalp treatment) கடந்த ஜூலை 20 அன்று ஊழியர் அங்கு சென்றுள்ளார்.

Photo from employer via Mothership

உச்சந்தலை சிகிச்சைக்கு S$99 செலவாகும் என்று அங்கு கூறப்பட்டது, அதற்கு ஊழியர் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டார்.

இறுதியாக, அவர் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ரசீதை சரிபார்க்காமல் பணம் செலுத்தியுள்ளார்.

வங்கியிடமிருந்து குறுஞ்செய்தி

பின்னர், அவர் வேலைக்கு வந்தபோது, OCBC வங்கியிடமிருந்து குறுஞ்செய்தியை பெற்றார், அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் ஒப்புக்கொண்ட S$228க்குப் பதிலாக, S$1,450 கட்டணம் வசூலிக்கப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், பிரச்சனை குறித்து விசாரிக்க கடைக்கு திரும்பினார்.

பணத்தை திருப்பி கோரல்

ஊழியர் திரும்பிச் சென்று பணத்தைத் கேட்டபோது, கூடுதலாக பெறப்பட்ட பணத்தை நீங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஊழியரிடம் சாக்குபோக்கு கூறியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை.

முன்னரே ஊழியரிடம் S$1,450 தொகுப்புக்காக கையெழுத்திட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவருக்கு அதில் ஆர்வம் இல்லை.

புகார் பதிவு

கடைசியாக, கடையின் நற்பெயர் பாதிக்கும் என்று S$725 ஊழியரிடம் திருப்பி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, மீதமுள்ள பணம் அந்த நாள் முன்பு அவர் பெற்ற சேவைகளுக்கானது என்றும் அங்கு கூறப்பட்டதாக முதலாளி மதர்ஷிப்பிடம் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Photo from employer via Mothership