இந்தியாவில் தோன்றிய “சாம்பர் மான்” இனம்… சிங்கப்பூரில் அரிதான மானை கண்ட அதிஷ்டசாலி குடும்பம்!

sambar-deer-crossing-road
Putnorfauzy US/Facebook

சிங்கப்பூரில் அரிய வகை உயிரினமான “சாம்பர் மான்” சாலையைக் கடக்கும் அழகிய காட்சியை மிகவும் அதிர்ஷ்டசாலி குடும்பம் ஒன்று கண்டு மகிழ்ந்தது.

சாம்பர் மான்கள் சிங்கப்பூரில் அரிதானவை என்பது குறிப்பிடத்தக்கது, வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக 1940களில் அதன் இனம் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!

தற்போது மீதமுள்ள சாம்பர் மான்கள் சிங்கப்பூரில் எப்போதாவது தென்படும், அதை காண்போர் அதை பற்றி பெரிதாக பேசுவர்.

இந்நிலையில், Singapore Wildlife Sightings என்ற Facebook குழுவில் சனிக்கிழமை (மார்ச் 5) பதிவேற்றிய 28 வினாடி வீடியோவில், அந்த அரியவகை காட்சியை காண முடிகிறது.

இந்த அரிய காட்சியைக் கண்டதும், அந்த குடும்பத்தில் ஒருவர், “நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!” என்று சத்தம்போட்டு மகிழ்ந்தார்.

இந்த வகை மான்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள மரங்கள் நிறைந்த வாழ்விடங்களிலும் காணப்படுகின்றன.

மேலும், இந்த மான் இனம் இந்தியாவில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இம்மான்களுக்கு “கடம்பை மான்” என்ற பெயரும் உண்டு.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்

 

இந்தியாவில் தோன்றிய “சாம்பர் மான்” இனம்: சிங்கப்பூரில் அதை காண்பது அரிது – கண்டவர் நெகிழ்ந்த சம்பவம்