இந்தியாவில் தோன்றிய “சாம்பர் மான்” இனம்: சிங்கப்பூரில் அதை காண்பது அரிது – கண்டவர் நெகிழ்ந்த சம்பவம்

Sambar deer singapore
Terry Shin

சிங்கப்பூரில் வெறும் 20 மட்டுமே வசிக்கும் நிலையில், “சாம்பர் மான்” வகையை பார்ப்பது கிட்டத்தட்ட விசித்திரமான காட்சி என்றே கூறலாம்.

நம்மில் பெரும்பாலானோர் இந்த அறிய வகை மான்களை பார்த்திருக்க மாட்டோம் என்பது நிதர்சனம்.

விழிப்புடன் இருந்தாலும் இப்படியும் நீங்கள் மோசடி செய்யப்படலாம் – இந்திய ஊழியர்கள் உஷார்

டெர்ரி ஷின் என்ற மலையேறுபவர் இந்த மூன்று அரியவகை மான்களையும் பார்த்துள்ளார், அதன் பின்னர் அவர் Singapore Wildlife Sightings என்ற பேஸ்புக் குழுவில் இதனை பகிர்ந்து கொண்டார்.

மதர்ஷிப்பிடம் பேசிய ஷின், அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை சாம்பார் மான் கூட்டத்தைப் பார்த்ததாகக் கூறினார்.

முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று சாம்பார் மான்களை பார்த்ததால், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார்.

உள்நாட்டில், சாம்பார் மான்கள் குறைவாகவே காணப்படுகின்றன, மேலும் சில சமயங்களில் தனியாக ஒரே ஒரு சாம்பார் மான் மட்டுமே தோன்றும்.

இந்த வகை மான்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள மரங்கள் நிறைந்த வாழ்விடங்களிலும் காணப்படுகின்றன.

மேலும், இந்த மான் இனம் இந்தியாவில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இம்மான்களுக்கு “கடம்பை மான்” என்ற பெயரும் உண்டு.

சிங்கப்பூர் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை இரண்டு குழந்தைகளுடன் சுத்தம் செய்த பெண்!