சிங்கப்பூரில் சனிக்கோளின் காட்சி – அழகிய வளையங்களுடன் தோன்றும் காட்சியை படம்பிடித்த சிங்கப்பூரர்

skyspotting milkyway singapore ASTROIMAGE
சிங்கப்பூர்வாசிகள் சிலர் அடிக்கடி வானில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் தோற்றத்தையும் கவனித்து வருகின்றனர்.சிங்கப்பூரர் ஒருவர் சமீபத்தில் மேகத் திரள்களின் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் மற்றொருவர் சிங்கப்பூரில் இருந்து சனி மற்றும் அதன் வளையத்தின் தெளிவான மற்றும் பிரமிக்க வைக்கும் படங்களை CloudSpotting & SkySpotting Singapore Facebook பக்கத்தில் வெளியிட்டார்.
ஆகஸ்ட் 14, 2022 ஞாயிற்றுக்கிழமை,புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.தொலைநோக்கி மற்றும் கிரக இமேஜிங் கேமரா, மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் தெளிவான காட்சிகளை எடுக்க முடிந்தது.
சிங்கப்பூரில் இருந்து சனி மிக நன்றாகவே தெரியும்.சிங்கப்பூரில் ஆகஸ்டு 14-ம் தேதி முதல் ஆகஸ்டு 21-ம் தேதி வரை கிரகம் மிக நன்றாகத் தெரியும் என்றும் வானவியல் தகவல்கள் வெளியாகின.

 

சனி வாரம் முழுவதும் ஒவ்வொரு மாலை 7 மணிக்குப் பிறகு அடிவானத்திற்கு மேலே உயரும் போது தோன்றும், காலை 7 மணிக்குப் பிறகு மறைந்துவிடும்.கோளின் வளையங்களை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.வளையங்கள் பூமியுடன் ஒப்பிடும்போது 13.9 டிகிரி சாய்வாகத் தோன்றும்.

 

சனி தோராயமாக வருடத்திற்கு ஒரு முறை பூமியின் எதிர்க்கு வருகிறது.சனி 2022 இல் பூமிக்கு மிக அருகில் இருக்கும், வெறும் 132.6 பில்லியன் கிமீ அல்லது சுமார் 73 ஒளி நிமிடங்கள் அல்லது பூமியிலிருந்து சூரியனுக்கான சராசரி தூரத்தை விட ஒன்பது மடங்கு குறைவாக இருக்கும்.