சவூதி பல்பொருள் அங்காடியில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர்!

Video Crop Image

சவூதி அரேபியாவில் வேலைப் பார்க்கும் தமிழர் ஒருவர் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு விழுந்து உயிரிழந்த காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியின் 7 அறையில் இடிந்து விழுந்த மேற்கூரை: 100 பேர் வெளியேற்றம் – ஊழியர்களின் நிலை?

தமிழகத்தின் கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த அன்பு என்பவர் சவூதி அரேபியாவில் பணிப்புரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 21- ஆம் தேதி அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கச் சென்ற அன்பு, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த அன்புவின் குடும்பத்தினர், கடும் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. மேலும், அவரது உடலைத் தாயகம் கொண்டு வரக்கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.

கடல் உணவுகளை வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் காரில் தப்பியோடிய நபர் – கடையின் உரிமையாளர் பேஸ்புக்கில் கண்டனம் !

இதனிடையே, பல்பொருள் அங்காடியில் அன்பு பொருட்களை வாங்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழும், காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இது தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.