புதிய அம்சங்களுடன் கூடிய எஸ்.பி.எஸ். போக்குவரத்து செயலி!

Photo: SBS Transit Ltd Official Facebook Page

 

சிங்கப்பூரில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது எஸ்.பி.எஸ். போக்குவரத்து நிறுவனம் (SBS Transit Ltd).

 

இந்த போக்குவரத்து நிறுவனம் பயணிகள் காலதாமதமின்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் வகையில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்.பி.எஸ். போக்குவரத்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்ஃபோன் செயலியான ‘SBS Transit mobile app’ என்ற செயலில் புதிய வசதிகளை கூடுதலாக இணைத்துள்ளது.

 

அதன்படி, பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் நாம் இப்போது எந்த இடத்தில இருக்கிறோம், எந்த சாலையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், பயணிக்கும் வழியில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளதா, இந்த எண் கொண்ட பேருந்து எந்த சாலை வழியே பயணிக்கும் உள்ளிட்டவைத் தொடர்பாக எவ்வித காலத்தாமதமின்றி பயணிகள் எளிதாக அறிந்துக் கொள்ளும் வகையில் எஸ்.பி.எஸ். செயலியில் கூகுள் மேப் வசதியடன் புதிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

பயணிகள் தங்களது ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனில் பிளே ஸ்டோரில் எஸ்.பி.எஸ். போக்குவரத்து செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.