Dota2 வின் வருடாந்திர உலக சாம்பியன்ஷிப் போட்டி- டிக்கெட்டுகள் கொள்ளை லாபத்தில் மறுவிற்பனை செய்யப்படுவதாக புகார் !

scalpers dota

டோட்டா 2 இன் டெவலப்பர்கள் சமீபத்தில் இந்த கேமின் வருடாந்திர உலக சாம்பியன்ஷிப் போட்டியான தி இன்டர்நேஷனல் 11 (TI11) போட்டியை சிங்கப்பூர் நடத்தும் என்று அறிவித்திருந்தனர்.

உலகின் தலைசிறந்த 16 டோட்டா 2 அணிகள் பல பிளேஆஃப் சுற்றுகளில் போட்டியிடும் போட்டிகள் சன்டெக் மைதானத்தில் அக்டோபர் 20 முதல் 30 வரை நடைபெறும். சன்டெக் மைதானத்தில் நடக்கும் பிளேஆஃப் சுற்றுகளின் ஒரு நாளுக்கான டிக்கெட்டுகளின் விலை S$88 ஆகும், அதே சமயம் சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் கிராண்ட் பைனல்களுக்கான டிக்கெட்டுகள் இரண்டு நாட்களுக்கு S$498 ஆகும்.

ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு ஐந்து டிக்கெட்டுகள் என்ற வரம்பு விதிக்கப்பட்டநிலையில்  இணையதளம் நேரலைக்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதில் கோபமான சில ரசிகர்கள் அதிக லாபத்தில் விற்கும் டிக்கெட் மறுவிற்பனயளர்கள் தான் இதற்கு காரணம் என்றனர்.

டிக்கெட் மறுவிற்பனயளர் ஒருவர் இறுதிப் போட்டிக்கான இரண்டு டிக்கெட்டுகளை தலா S$5,500க்கு விற்றுக்கொண்டிருந்தார், இது அசல் விலையை விட 11 மடங்கு அதிகம். மற்றொரு டிக்கெட் மறுவிற்பனயளர், S$1,700க்கான டிக்கெட்டுகளை விற்றுள்ளார். இதனால் போட்டிக்காக ஆவலுடன் காத்திருந்த சில Dota 2 ரசிகர்கள், டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.