உண்மையிலேயே அவசர நிலையா? – உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஊர்தி அனுப்பப்படும் என்று தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

67-year-old man found dead in Braddell flat

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அடுத்த ஆண்டிலிருந்து அவசர அழைப்புகளை சீரமைத்து, அது உண்மையிலேயே அவசரநிலை தான் என்று உறுதிப்படுத்திய பின்னரே அவசர ஊர்திகளை அனுப்பும் என்று தெரிவித்தது .அவசர நிலைச் சேவைகளுக்கான தேவை அதிகரிப்பதை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வண்டிகளை அவசரநிலை இன்றி அனுப்புவதைத் தவிர்க்க, சூழலை தீர்மானிப்பதற்கான கொள்கையை குடிமைத் தற்காப்புப் படை அடுத்த ஆண்டு அமலுக்கு கொண்டு வரும். அது குறித்த விவரங்களும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.

அவசர மருத்துவ சேவைகளைக் கோரி 995 எண்ணிற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக உள்துறை துணை அமைச்சர் முகமது ஃபைசல் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆண்டு பணித் திட்ட கருத்தரங்கில் நேற்று அவர் பேசியபோது அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

சுமார் 2,10,000-க்கும் அதிகமான அவசர அழைப்புகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆம்புலன்ஸ் வண்டிகளை அனுப்பியது. இது 2020 ஆம் ஆண்டைவிட 12 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டு ஆண்டுகளிலும் கிடைக்கப்பெற்ற அழைப்புகளில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு அவசர அழைப்புகள் ஆகும்.

நேற்று புதிய ஆய்வு பயிற்சி நிலையத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தொடங்கியது. இந்த நிலையத்தில் தொழில்நுட்பத்தை கொண்டு குடிமை தற்காப்பு படையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.