சேதமடைந்த அரசுப் பள்ளி…ரூபாய் 1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டித் தந்த சிங்கப்பூர் சகோதரர்கள்!

சேதமடைந்த அரசுப் பள்ளி...ரூபாய் 1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டித் தந்த சிங்கப்பூர் சகோதரர்கள்!
Viral Photo

 

 

திருவாரூரில் தாங்கள் படித்த பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டித் தந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளனர் முன்னாள் மாணவர்களான சிங்கப்பூர் சகோதரர்கள். தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த சகோதரர்கள் செய்த செயல் பெருக வாழ்ந்தான் மக்களை நெகிழ வைத்துள்ளது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பிரபல தொழிலதிபர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருக வாழ்ந்தான் கிராமத்தில் கடந்த 1960- ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசுப் பள்ளி. இந்த பள்ளி 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பெருக வாழ்ந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 500- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பள்ளி கஜா புயலில் பெரும் சேதமடைந்தது. இதனால் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்துள்ள அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களான சகோதரர்கள் இளங்கோவன், முத்தழகன் மற்றும் ராஜகோபாலுக்கு அவர்களது தாய் தனசேகரி தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், நீங்கள் படித்த பள்ளி தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே, பள்ளியை சரி செய்ய நீங்கள் மூன்று பேரும் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, மூவரும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், தனசேகரி இயற்கை எய்தினார். இதன்படி, மூவரும் நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அரசிடம் அனுமதிப் பெற்று சுமார் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளனர்.

கடையில் இருந்து திடீரென விழுந்த கண்ணாடி… உடைந்து சிதறியதில் காயமுற்ற ஊழியர்கள்

அதுமட்டுமின்றி, கட்டிடத்திற்கு தனசேகரி அம்மாள் அறிவரங்கம் என பெயர் சூட்டி, தந்தை அன்பழகனின் கரங்களால் கட்டிடத்தைத் திறந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் சகோதரர்களுக்கு அந்த கிராம மக்கள், நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் மட்டுமின்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.