காற்றின் தரம் ‘அபாயகரமான’ நிலையை எட்டும்போது பள்ளிகள் மூடப்படுமா?? – MOE பதில்!

Haze Singapore

காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டும் என்ற முன்னறிவிப்பை பெறும் போது, பள்ளிகள் மூடுவது குறித்து MOE பரிசீலிக்கும், என தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரில், ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு இன்று (திங்கள்) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், காற்றின் தரம் குறித்து தகவல் வெளியான பின்பு பள்ளிகள் விடுமுறை குறித்த தகவலை பள்ளிகள் வெளியிடும்” என்று MOE பெற்றோர்களுக்கு உறுதியளித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் 24 மணி நேர PSI ரீடிங் 110 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) இதுபற்றி குறிப்பிடுகையில், 50 மற்றும் அதற்கும் குறைவான PSI ரீடிங் “நல்ல” காற்றின் தரம் என்றும், 51-100 க்கும் இடையில் “மிதமானது” என்றும், மேலும் 101-200 க்கும் இடையில் “ஆரோக்கியமற்றது”, 201-300 “மிகவும் ஆரோக்கியமற்றது” மற்றும் “300 க்கு மேல் அபாயகரமான அளவு என்று தெரிவித்துள்ளது.