காரணமின்றி கத்திரிக்கோலால் குத்திவிட்டு குட்டித் தூக்கம் போட்ட குற்றவாளி! – மூன்றே மணி நேரத்தில் வீடுதேடி விரைந்து கைது செய்த காவல்துறை!

scissors
சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் டிச. 31, 2022 அன்று 36 வயது நபர் ஒருவர் கத்திரிக்கோலால் இருவரைத் தாக்கினார்.காவல்துறைக்குப் புகாரளிக்கப்பட்ட பின்னர் மூன்று மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.பிளாக் 372 ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1-க்கு அருகில் இரண்டு நபர்களை ஒருவர் கத்திரிக்கோலால் தாக்கியதாகக் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மீது ஜனவரி 2 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது.கிளெமென்டி காவல் பிரிவு அதிகாரிகள் CCTV காட்சிகள் மூலமாகவும்,விசாரணைகள் மூலமாகவும் குற்றவாளியின் அடையாளத்தை நிறுவி அவரைக் கைது செய்தனர்.
36 வயதுடைய நபர், 44 வயதுடைய நபரை அணுகி அவரை பலமுறை குத்தியதாகவும் கூறப்படுகிறது.மேலும்,Blk 339 Jurong East Avenue 1 க்கு அருகாமையில் உள்ள 47 வயதுடைய மற்றொரு நபரை அணுகி ஜோடி கத்திரிக்கோலால் தாக்கியுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அதன் பிறகு 15 வயதுடைய வாலிபரை அணுகி அவரை தாக்க முற்பட்ட போது வாலிபன் தப்பித்து காவல்துறையிடம் புகாரளித்தார்.குற்றம்சாட்டப்படும் நபர் வரிசையான வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு வீட்டிற்குச் சென்று குட்டித் தூக்கம் போட்டிருக்கிறார்.
புகார் பதிவு செய்யப்பட்ட மூன்று மணி நேரத்திலேயே காவல்துறை அந்த நபரின் வீட்டுக் கதவைத் தட்டியது.தூக்கத்திலிருந்து விழித்த நபரின் கையில் கைவிலங்கு மாட்டப்பட்டது.இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம்,பிரம்படி அல்லது ஏதேனும் தண்டனை அளிக்கப்படும்.