அடிக்கடி வந்து போற இடம்தான்! – சிங்கப்பூரில் கடற்பசு இனத்தை பாதுகாக்க நடவடிக்கை

sea cow singapore

சிங்கப்பூரின் நீரிணைகளில் கடற்பசுக்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.ஜோகூர் நீரிணையின் கிழக்குப்பகுதியில் உள்ள நீர்ப்பகுதிகளில் அழிந்து வரும் இனமான டுகொங் என்ற கடற்பசுக்கள் அதிகம் தென்படுகின்றன.

உபின்,தெக்கொங் நீர்நிலைகளில் கடல் புல்வெளிகள் இருப்பதை கண்டறிந்து அந்தப் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம் கடற்பசு இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற இயலும்.எனவே,அதுபோன்ற பகுதிகளை கண்டறிந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கடற்பசுக்கள் சுமார் 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.கடந்த 25 வருடங்களில் கடற்பசுக்கள் பெரும்பாலும் ஜோகூர் நீரிணையின் கிழக்குப்பகுதியில் தென்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்பரப்பில் அதிகமான கப்பல் போக்குவரத்து மற்றும் மனித நடமாட்டம் போன்றவற்றால் தென்கிழக்காசியாவில் கடற்பசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.வட்டார அளவில் சிங்கப்பூரின் கடல்பகுதி வாழ்விடம் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஆய்வாளார்கள் இது போன்று பன்மடங்கு விரைவாக செயல்பட வேண்டும் என்கின்றனர்.