கடல்வழி ‘VTL’ பயணத் திட்டம் மூலம் பாத்தாம் தீவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணிகள்!

Photo: BatamFast

சிங்கப்பூருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே முழுமையாக கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களுக்கான கடல்வழி ‘VTL’ சிறப்பு பயணத் திட்டம் (Sea Vaccinated Travel Lane- Sea VTL) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியா நாட்டின் பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் பாத்தாம் (Batam) மற்றும் பிந்தான் (Bintan) தீவுகளுக்கு கப்பல் மூலம் செல்லலாம். பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

காவல்துறை அதிரடி; சந்தேக நபர்கள் 244 பேர் மீது விசாரணை!

அதேபோல், பத்தாம் மற்றும் பிந்தான் தீவுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பல் மூலம் பயணம் மேற்கொள்ளலாம். இங்கு வந்தவுடன் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

அந்த வகையில் கடல்வழி VTL சிறப்பு பயணத் திட்டத்தின் மூலம் இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில் இருந்து கிட்டத்தட்ட 60 பயணிகள் நேற்று (25/02/2022) சிங்கப்பூருக்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாத்தாமில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த முதல் பயணிகள் குழு இதுவாகும்.

சிங்கப்பூரில் கட்டணத்தை உயர்த்த அனைத்து டாக்ஸி நிறுவனங்களும் முடிவு!

பாத்தாமிலிருந்து 350 பயணிகளும், பிந்தானில் இருந்து 350 பயணிகளும் சிங்கப்பூரின் தனாஹ் மேரா படகு முனையத்திற்கு (Tanah Merah Ferry Terminal) வாரந்தோறும் VTL இன் கீழ் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சிங்கப்பூர் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று டெர்மினல்களுக்கு இடையே நியமிக்கப்பட்ட படகு சேவைகள் பிராந்திய படகு ஆபரேட்டர்களான Batam Fast மற்றும் Bintan Resort Ferries மூலம் இயக்கப்படுகிறது.

சிங்கப்பூர்- வியட்நாம் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று சிங்கப்பூரைச் சேர்ந்த 28 பயணிகள், கடல்வழி ‘VTL’ பயணத் திட்டம் மூலம் பாத்தாம் தீவைச் சென்றடைந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.

அதைத் தொடர்ந்து, பிந்தான் தீவிலிருந்தும் பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.