வாங்கிய சில நாட்களிலேயே எரிந்து நாசமான கார் – விரக்தியடைந்த உரிமையாளர் !

Car fire Old Airport Road Food Centre

ஓல்ட் ஏர்போர்ட் ரோடு ஃபுட் சென்டருக்கு வெளியே உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஆக., 12 அன்று கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. முகநூலில் வெளியான வீடியோக்களில், கருப்பு நிற ஹோண்டா காரின் என்ஜின் பெட்டி தீயில் மூழ்கி, அடர்த்தியான கரும்புகையை வெளியேற்றுவதைக் கான முடிந்தது.

சம்பவ இடத்தில் மூன்று SCDF பணியாளர்களும், சிங்கப்பூர் போலீஸ் படையின் (SPF) அதிகாரிகளும் காணப்பட்டனர். இறுதியாக காரின் இன்ஜின் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.

SCDF ஆகஸ்ட் 12 அன்று மதியம் 3:15 மணியளவில், 51 பழைய விமான நிலைய சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. காரின் என்ஜின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஒரு ஹோசரீலைப் பயன்படுத்தி விரைவாக அணைக்கப்பட்டதாகவும் SCDF கூறியுள்ளது.

இதில் யாருக்கும் காயம் ஏதும் இல்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கருப்பு ஹோண்டாவின் உரிமையாளரான 52 வயதான Xie , 10 நாட்களுக்கு முன்புதான் இந்த காரை செகண்ட் ஹான்டில் வாங்கியுள்ளார். அவர் ஓல்ட் ஏர்போர்ட் ரோடு ஃபுட் சென்டரில் உணவருந்தியபோது, ​​திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிறுந்தியிருந்த தனது காரில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டுள்ளார். மேலும் தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தனக்கு எந்த துப்பும் இல்லை என்றும், செகண்ட்ஹேண்ட் காரை வாங்குவதற்காக அவர் S$70,000 செலவிட்டதாகவும் இதனால் தான் விரக்தியடைந்ததாகவும் கூறியுள்ளார்.