சிங்கப்பூரில் பணியில் இருந்த தமிழ் ஊழியர் மீது தாக்குதல் (Video) – வலுக்கும் கண்டனம்!

Video: Security Association Singapore

சிங்கப்பூரில் உள்ள தெம்பனீஸ் ஜயண்ட் பேரங்காடி முன்பு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதற்காக சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 10.20 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகவும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாகவும் சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கம் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கட்டுமானம், கடல் துறைகளில் அதிரடி ஆய்வு… 50 க்கும் மேற்பட்ட வேலை நிறுத்த உத்தரவு

முகக்கவசம் அணியாமல் கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற ஆடவர் ஒருவரை சுரேஷ் பெருமாள் என்ற பாதுகாவலர் முகவசம் அணிய வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அதற்க்காக ஆத்திரமடைந்த ஆடவர் பாதுகாவலரை தகாத வார்த்தைகளால் ஏசியவாரே பாதுகாவலரை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த ஆடவரின் மீது பாதுகாவலர் எந்த ஒரு பதில் தாக்குதல் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பேரங்டி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இருவரையும் அப்புறப்படுத்தும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆடவரின் மோசமான நடவடிக்கையை கண்டித்து சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கம் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணம்… சாலையில் செல்வோரிடம் தொல்லை – மடக்கி பிடித்த போலீஸ் (Video)