நின்று போன இதயத்துடிப்பு! – போதைப்பொருளால் மரணித்த ஆடவர்!

selarang

சிங்கப்பூரில் உள்ள Selarang Halfway House-இல் இந்தாண்டு முற்பாதியில் ஒரு நபர் மரணமடைந்தார்.அந்த நபரின் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் சட்டவிரோத மருந்துகளை உட்கொண்டதால் அதன் விளைவு மரணத்திற்கு வழிவகுத்தது என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

49 வயதான இஸ்மாயில் கொஸ்னாக் என்ற நபர் இந்தாண்டு மே மாத இறுதியில் மரணமடைந்தார்.அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்டது.

காவல்துறை ஆவணங்களின்படி,அவர் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக அவருக்குக் குற்றப்பதிவு வழக்கு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.போதைக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு Selarang Halfway House இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் தங்கியிருந்த அறைக்கு அவரை அழைக்க இல்லத்தின் ஊழியர்கள் மே 27ஆம் தேதியன்று சென்றனர்.அப்போது ஊழியர்களிடம் தமக்கு களைப்பாக இருப்பதாகவும்,பின்னர் வருவதாகவும் கூறி அவர்களுடன் செல்ல மறுத்திருக்கிறார்.பின்னர்,அவரைக் காண மீண்டும் பிற்பகல் 1.45 மணியளவில் சென்ற போது அவர படுத்தநிலையில் அசையாமல் கிடந்ததைக் கவனித்தார்கள்.

அந்த நாள் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.இதய அடைப்பினால் மரணித்ததாக தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.பின்னர்,அவரது உடலில் போதைப்பொருள் கலந்திருப்பதைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டுபிடித்தது.