ஆன்லைனில் போலியான பொருட்கள் விற்பனை – 3 பேர் கைது

ஆன்லைனில் போலியான பொருட்களை விற்பனை செய்த சந்தேகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 40 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது, அதில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர்.

கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய குழாயில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழப்பு – தொடரும் சோகம்

கடந்த புதன்கிழமை (மே 25) பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 2, பூன் கெங் சாலை மற்றும் ரிவர்வேல் கிரசன்ட் ஆகிய இடங்களில் சோதனை நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அப்போது, ஆன்லைன் தளத்தின் வழியாக போலியான பொருட்களை விற்பனை செய்த சந்தேகத்தின்பேரில் அவர்கள் பிடிபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​ஆடைகள், பைகள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட சுமார் 800-க்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு S$18,000க்கு மேல் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

“கோழியை விட மாவு அதிகம்”…கோழி தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஏன் இந்த அநியாயம் – வெறுப்படைந்த தம்பதி