தொழிற்ச்சாலை கட்டிடத்தில் இரசாயன கசிவு… “அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்” – எச்சரிக்கை செய்யும் SCDF

sembawang gas-leak

செம்பவாங்கின் நம்பர் டூ காம்பாஸ் கிரசென்ட்டில் (Number Two Gambas Crescent) அமைந்துள்ள ஒரு தொழிற்ச்சாலை கட்டிடத்தில் குளோரின் இரசாயன கசிவு ஏற்பட்டது.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களை விரைவாக அனுப்பியது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF). இச்சம்பவம் இன்று (மே 28) காலை நடந்தது.

குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள் – அதற்கான தீர்வுகள்!

அதாவது உதவி வேண்டி காலை 7:15 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக SCDF முகநூல் பதிவில் கூறியுள்ளது.

பின்னர், குப்பை அறையில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவை SCDF வீரர்கள் கண்டுபிடித்தனர்.

அறைக்குள் உள்ள நீராவிகளை நீர்த்துப்போகச் செய்ய அவர்கள் தண்ணீரை பயன்படுத்தினர். மேலும், இதற்காக SCDF வீரர்கள் இரண்டு மின்விசிறிகளையும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை பகுதியில் இருந்து 20 பேர் வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

கூடுதலாக, அந்த பகுதியைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு SCDF அறிவுறுத்தியது.

“இது உனக்கு பிடிக்குமா..?” சிறுமியிடம் தன் உறுப்பை காட்டிய வெளிநாட்டு இளைஞருக்கு சிறை