செங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!

செங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!
Photo: SCDF

 

சிங்கப்பூரின் செங்காங் (Sengkang) பகுதியில் உள்ள ஃபெர்ன்வேல் சாலையில் (Fernvale Road) அமைந்துள்ள புளாக் 443C- ல் நேற்று (மே 18) காலை 06.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் (Singapore Civil Defence Force- ‘SCDF’), காவல்துறையினருக்கும் தொலைபேசி வாயிலாக தகவல் கொடுக்கப்பட்டது.

லிட்டில் இந்தியாவில் 7 பேர் கைது… S$1 மில்லியன் பறிமுதல் – வீராசாமி சாலை, அப்பர் டிக்சன் சாலையில் அதிரடி

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு மாடிக்கு தீயணைப்புக் கருவிகளுடன் நுழைந்தனர். அப்போது வீட்டின் வரவேற்பறையில் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த தீயை, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.

அத்துடன், அந்த வீட்டில் இருந்த மூன்று பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக வெளியேற்றினர். எனினும், புகையைச் சுவாசித்ததால் அந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அக்கம், பக்கம் வீடுகளில் இருந்து மூன்று பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே 50 குடியிருப்பாளர்கள் தாங்களாவே வெளியேறிவிட்டனர்.

தரவுகள், போட்டோக்கள் நீக்கப்படலாம் – Google கணக்கு உடையோருக்கு எச்சரிக்கை

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்னூட்டம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த தனிநபர் நடமாட்ட சாதனத்தில் இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.