சிராங்கூன் காபி கடையில் தீ… விரைந்த SCDF – ஒருவர் மருத்துவனையில் அனுமதி

fire-serangoon
Shanice/TikTok and Google Maps

261 சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் (Serangoon Central Drive) இன்று (மே 14) நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் TikTok பயனர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிடோக் நார்த் கோர தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை, ஆடவர் உயிரிழப்பு – முழுமையான விவரம்

இன்று நள்ளிரவு 1:30 மணியளவில் தீப்பிழம்புகள், புகை ஏற்பட்டு மற்றும் சத்தம் கேட்டதாகவும் ஷானிஸ் என்ற குடியிருப்பாளர் கூறினார்.

அதாவது இன்று 1:20 மணியளவில் 261 செராங்கூன் சென்ட்ரல் டிரைவில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து புகார் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

பிளாக்கின் முதல் தளத்தில் உள்ள காபி கடையின் கிச்சன் எக்ஸாஸ்ட் டக்டிங்கில் (KED) என்னும் புகை வெளியேற்ற அமைப்பில் தீ ஏற்பட்டது என்றும், தண்ணீர் ஜெட் கருவியை பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது என்றும் SCDF கூறியுள்ளது.

SCDF வருவதற்கு முன்பே, அங்கிருந்த சுமார் 20 பேர் வெளியேறிவிட்டனர். அந்த காபி கடைக்கு மேலே குடியிருப்பு வீடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புகையை உள் இழுத்த காரணத்தால் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் லாரியில் கடத்தப்பட்ட நாய்கள் – கடத்தலின் பின்னணி என்ன?