தொடர்ச்சியாக upskirt வீடியோ எடுக்கும் ஆசாமி – மீண்டும் அதே வீடியோ… 36 வார சிறை விதிப்பு

Photo: Getty

தொடர்ச்சியாக upskirt என்னும் தவறான புகைப்படம் எடுத்த ஆடவர் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதாவது விடுவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே குற்றத்தைச் செய்து தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக சிறைக்கு சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் 6 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள்… லாரியை ஓட்டும் முன் கட்டாய ஓய்வு

37 வயதான கேரி ஹுவாங் குன்ஜி என்பவருக்கு இன்று புதன்கிழமை (அக். 19) 36 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டன.

சமீபத்திய குற்றச்சாட்டாக, அவர் ஏப்ரல் 30 அன்று புகிஸ் சந்திப்பில் எஸ்கலேட்டரில் சென்ற பெண்ணை upskirt வீடியோ எடுத்து சிக்கினார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவரைக் கவனித்து போலீசில் புகார் அளித்த பின்னர் ஹுவாங் கைது செய்யப்பட்டார்.

“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்