சூரியனின் ஆற்றல் ஒரு மணிநேரத்திற்கு முன்பே தெரிந்துவிடும் ! – மற்ற நாடுகளுக்கும் விற்பனைசெய்ய திட்டமிடும் சிங்கப்பூர்

Sunseap wins tender again to install solar panels under HDB, EDB project

சிங்கப்பூருக்கு தேவையான மின்சாரத்தில் பகுதியளவு சூரியஒளியிலிருந்து மின்தகடுகள் மூலம் பெறப்படுகிறது.தற்போது, சூரிய சக்தி எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதை ஒருமணிநேரத்திற்கு முன்பே தெரிந்து கொள்ள கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

SERIS எனும் சூரிய சக்தி சோதனைக் கழகம் இதற்கான கட்டமைப்பை வடிவமைத்துள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தேவை அதிகரித்து வரும் நிலையில் சிங்கப்பூர் நம்பகமான மின்சாரக் கட்டமைப்பை நோக்கி மேலும் ஓரடி முன்னேறியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே சூரியனின் ஆற்றலைச் சிறப்பாகக் கண்காணிக்க சூரியக் கதிர்களை அளவிடும் முறையை SERIS அமைத்தது. சுமார் 25 நிலையங்களில் சூரிய சக்தியை அளவிடும் முறை அமைக்கப்பட்டது.இதன் மூலம் சிங்கப்பூர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தித் தகடுகளைக் கண்காணிக்க முடிந்தது.

சூரிய ஆற்றலின் தரவுகள் தற்போது பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன.சூரிய ஆற்றலை ஒரு மணிநேரத்திற்கு முன்பே கணித்து முன்னறிவிக்கும் கட்டமைப்பை மற்ற வெப்பமண்டல நாடுகளுக்கும் விற்பனை செய்ய SERIS திட்டமிடுகிறது.