நவீன வசதிகளுடன் கூடிய 7 பேருந்து நிறுத்தங்கள்!

(Photo: LTA)

சிங்கப்பூர்: ஏழு பேருந்து நிலையங்களில் நவீன காத்திருப்பு அனுபவத்தை தரும் எண்ணத்தில் மேம்படுத்த இருப்பதாக நில போக்குவரத்து ஆணையம் முகநூலில் தெரிவித்துள்ளது.

அங் மோ கியோ, பிடோக் பூண் லே, கிளமெண்டி, செங்காங், சிராங்கூன் மற்றும் தோ பாயோ ஆகிய பேருந்து டெர்மினல்களில் நவீன காத்திருப்பு வசதிகள் அமைப்பதாக கூறப்பட்டுள்ளது.

‘சிங்கப்பூரில் இரண்டு சிறுமிகளை காணவில்லை’- தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

மேலும் குழந்தைகளுக்கான வசதிகள் கொண்ட கழிவறைகள், மருத்துவ அறைகள் மற்றும் இருக்கைகளுடன் கூடிய முன்னுரிமை வரிசை மண்டலங்கள், பாலூட்டும் தாய்மாருகளுக்கான அறைகள் ஆகியவற்றை பயணிகள் எதிர்பார்க்கலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இன்னும் விரிவாக்கப்பட்ட பயணிகள் சேவை அலுவலகம், பேருந்து நிறுவன ஊழியர்களுக்கான வசதிகளுடன் நிலையத்தில் மின் விளக்குகள் மற்றும் குளிரூட்டும் வசதிகளும் மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்துதலில் கட்டம் கட்டமாக நடைபெறும் பேருந்து இயக்கங்கள் பாதிக்கப்படாது என நில போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் கடை விலை: வருத்தத்தில் வாடிக்கையாளர்கள்