பன்றியின் ரத்தக்கட்டிகளை விற்ற பெண்! – ஆன்லைனில் அமோக விற்பனை;இறுதியில் விதிக்கப்பட்ட அபராதம்!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பன்றியின் ரத்தக் கட்டிகளை விற்பனை செய்த பெண்ணுக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 30 கிலோகிராம் பன்றி ரத்தக் கட்டிகளை யுவான் யிஃபான் (Yuan Yifan) என்ற பெண் அவரது வீட்டில் வைத்திருந்தபோது பிடிபட்டார்.கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் பிடிபட்டது.மேலும் அவற்றை அந்தப் பெண் இணையத்தில் விற்பனை செய்துள்ளார்.

இது போன்ற விலங்கு ரத்த உணவுப்பொருள்களில் கிருமிகள் உருவாகி நோய்கள் எளிதில் பரவக்கூடும் என்று உணவு அமைப்பு குறிப்பிட்டது.விலங்குகளின் ரத்தத்தை அசுத்தமான வழிகளில் வாங்குவதன் மூலம் கிருமிப் பரவும் அபாயம் இருப்பதாக உணவு அமைப்பு கூறியது.

சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் முறையான உரிமம் பெற்றவர்கள் மட்டுமே சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யமுடியும் என்பதை சுட்டிக்காட்டியது.மேலும்,சிங்கப்பூரின் தர்நிளைகளுக்கேற்ப உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.