சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் இந்த அட்டையை பூர்த்தி செய்யுங்கள் பயணிகளே! – 3,00,000 பயணிகள் நில எல்லையைக் கடந்ததாக தகவல்

ICA To Trial Beta Version Of “SG Arrival Card” e-Service And Mobile Application With Selected Transport Operators (Photo : ICA)
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் போதும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்பட்டுவிடும்.
இந்நிலையில் கடந்த வாரயிறுதி நாட்களில் தினமும் சுமார் 3,00,000 பயணிகள் இரண்டு நாடுகளையும் இணைக்கும் நில எல்லைகளைக் கடந்திருக்கின்றனர்.இந்த புள்ளிவிவரம் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரைக்கானது.

இந்தாண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து உட்லாண்ட்ஸ்,துவாஸ் நில எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன.அதன் பிறகு கடந்த வாரத்தில்தான் அதிகமானோர் சோதனைச்சாவடிகளின் வழி இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இரு நாடுகளின் நிலா எல்லைப் பகுதிகளிலும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.சிலர் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நெரிசலில் சிக்கிகொண்டதாக தெரிவித்தனர்.

இதற்கு மத்தியில், வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட காலத்தில் தினசரி 78,000-க்கும் அதிகமானோர் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே விமானத்தின் மூலம் பயணித்ததாக குடிவரவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
ஆகாய,நீர் மற்றும் தரை வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் முன் ‘SG arrival card’ என்ற சுகாதார அட்டையை நிரப்பி சமர்ப்பிக்குமாறு பயணிகளுக்கு ஆணையம் நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது ஆகும்.