பட்ஜெட் 2022: குறைந்த வருவாய் பிரிவினருக்கு என்னென்ன பயன்.? – அமைச்சர் விளக்கம்!

Pic: MCI

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கலான புதிய வரவுசெலவுத் திட்டம் குறித்து இணையத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு பதில் அளித்து நிதியமைச்சர் திரு. லாரன்ஸ் வோங் அவரது கருத்துகளை கூறினார்.

புதிய வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பல திட்டங்களில் பெரும்பாலானவை குறைந்த வருவாய் பிரிவினருக்கு பலன் அளிக்கும் என்றும், நடுத்தர வருவாய் பிரிவினரும் தாங்கள் செலுத்தும் வரிக்கு ஈடாக கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி – மீண்டும் சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

சிங்கப்பூரில் வரி உயர்வால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என இணையத்தில் ஒருவர் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு விளக்கமளித்த நிதியமைச்சர் வோங், குடும்ப ஆதரவுத் திட்டம், குடும்பங்களுக்குப் பயனீட்டு கட்டணக் கழிவுகளை வழங்கும். மேலும், அத்தகைய குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளையும் பெறும் என்றும், அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் கல்வி கற்க உதவி கிடைக்கும் என்றும் விளக்கமளித்தார்.

அந்தப் பற்றுச்சீட்டுகளைச் கொண்டு சிங்கப்பூர் குடும்பங்கள் அன்றாட செலவுகளைச் சமாளிக்கலாம். குடியிருப்பு வட்டாரக் கடைகள் மற்றும் உணவங்காடிகளிலும் அவற்றை பயன்படுத்த முடியும் என்றும், மேலும் அத்தகைய பிரிவினர், மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் திட்டத்தின் மூலம் கணிசமான அளவிற்கு அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு உதவி பெறுவார்கள் என்றும் திரு. வோங் தெரிவித்தார்.

மேலும், மேம்படுத்தப்பட்ட GST பற்றுச்சீட்டுத் திட்டமும் இதர பல திட்டங்களும் குறைந்த வருவாய் ஊழியர்களுக்கு நிரந்தர உதவியை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து ‘Non- VTL’ விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட்!