பிரதமர் லீ அவர்கள் Acapella பாடகர்களுடன்..!

PM Lee Hsien Loong With the talented acapella singers from 1023

Acapella பாடகர்களுடன் பிரதமர் லீ அவர்கள் இருக்கும் புகைப்படத்தை தமது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பிரதமர் லீ அவர்கள், 1023 இன் திறமையான Acapella பாடகர்களுடன் இருப்பதாகவும், அவர்களின் ‘சிங்காய் நாடு’ மற்றும் ‘முன்னேறு வாலிபா’ ஆகிய தமிழ் பாடல்களின் பதிப்பை கடந்த ஆண்டு பகிர்ந்ததாகவும், மேலும் அவர்களின் நேரலை நிகழ்ச்சியைக் கேட்பது ஒரு விருந்தாக அமைந்ததாக கூறியுள்ளார்.

கூடுதலாக, அவர்களின் இசைக்குழுவின் பெயருக்குப் பின்னால் உள்ள கதையை குரல் மூலம் ஒலி எழுப்பும் செரி என்பவர், 1024 மெகாபைட் 1 ஜிகாபைட் அல்லது 1 கிக் -ற்கு சமம் என்று விளக்கினார். எனவே, 1023 போன்ற பெயருடன், அவர்கள் எப்போதும் தங்கள் அடுத்த ‘கிக்’ ஐ எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுபற்றி 1023 குழு கூறுகையில், எங்கள் பிரதமர் லீ அவர்களுக்கு நன்றி. மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைவருடனும் எங்கள் இசையைப் பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய பாக்கியம், என்று மகிழ்ந்தனர்.