மது அருந்திவிட்டு லாரியில் தூங்கியதற்கா சிறைத்தண்டனை! – சிங்கப்பூர் சிறையில் சின்னத்தம்பி!

Sleep 7 hours day challenge
Unsplash

சிங்கப்பூரில் 44 வயதான சின்னத்தம்பி ஆருமோ என்பவர் மது அருந்திவிட்டு போதையில் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த குற்றத்திற்காக 5 வாரச் சிறைத்தண்டனையும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,அவருக்கு வாகனம் ஓட்ட 5 ஆண்டுத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்காங்கில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகே லாரி நிறுத்தப்பட்டிருந்தது.சின்னத்தம்பி குடித்துவிட்டு போதையில் லாரியில் தூங்கிக்கொண்டிருந்தார்.

போதையில் லாரியில் தூங்கியதற்கா சிறைத்தண்டனை என்று அனைவருக்கும் சந்தேகம் எழக்கூடும்.ஆனால்,சின்னத்தம்பி லாரியில் நீண்ட நேரத்திற்கு ஹாரன் சத்தத்தை ஒலித்திருக்கிறார்.இரவு 9 மணி முதல் 10 மணி வரை லாரியிருந்து 3 முறை நீண்ட நேரத்திற்கு ஹாரன் சத்தம் வந்ததாக ஒருவர் காவல்துறைக்குத் தகவல் அளித்திருக்கிறார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை,லாரியின் திசைமாற்றியின் மீது சின்னத்தம்பி தூங்கிக்கொண்டிருந்ததைக் கண்டது.அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.எனவே,சந்தேகத்தின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சட்டத்திற்கு புறம்பாக அளவுக்கு மீறி மது அருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளி,லாரியை நிறுத்திவிட்ட பின்பு தனது நண்பருடன் மது அருந்தியதாக கூறினார்.ஆனால்,அதற்கு ஆதாரம் எதுவும் இல்லாத காரணத்தால் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.அவர் ஏற்கனவே 2005ஆம் ஆண்டு மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டிய குற்றத்திற்காக அபராதம் செலுத்தினார்.