சிங்கப்பூரில் மாலை வேளையில் தரிசனம் கொடுக்கும் மழை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்

sg weather thundery-showers

சிங்கப்பூரில் கடந்த மாதம் இறுதி முதல் தற்போது வரை சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பொழிந்து வருகிறது.

வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாக இருப்பதாகவும், அது பருவமழை தொடக்கத்தைக் குறிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 மற்றும் மார்ச் முதல் தேதியில் மழை பொலிவானது 24 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்தது.

இன்று மார்ச் 6 ஆம் தேதியுடன் ஒப்பு நோக்குகையில், தொடர்ந்து பொழிந்து வந்த மழைக்கு சிறிது ஓய்வு இருக்கும் என்று தோன்றுகிறது.

வானிலை ஆய்வாளரின் கூற்றுப்படி, மார்ச் 6 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி நிலவரப்படி வெப்பநிலை 23.8°C முதல் 25°C வரை இருந்தது.

தொடர் மழை பொழிவால் சில் என்ற வானிலை நிலவி, பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.