சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாடு – உக்ரைன் அதிபர் மெய்நிகர் வாயிலாக உரை

shangri-la dialogue in singapore virtual meet with ukraine zelenskyy china america

சிங்கப்பூரிலும் இன்று ஷங்ரிலா மாநாடு தொடங்குகிறது.இந்த மாநாடு ஆசியாவிலேயே மிக உயரிய பாதுகாப்பு உச்சநிலை மாநாடு ஆகும். இரண்டு ஆண்டுகளாக covid-19 வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்ததால் மாநாடு நடத்த இயலவில்லை. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது நடக்கவிருக்கும் மூன்று நாள் மாநாட்டில் 42 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

உக்ரைனில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருவதால் அந்நாட்டுப் பிரதமர் ஜெலன்ஸ்கி சனிக்கிழமை அன்று மெய்நிகர் வாயிலாக மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மாநாட்டின் மிக முக்கிய அம்சமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த விவகாரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உச்சி மாநாட்டில் முதன் முதலாக அமெரிக்கா – சீனா நாடுகளின் தற்காப்பு துறை தலைவர்கள் நேரில் சந்திக்க உள்ளார்கள். ஷங்ரிலா மாநாடு கடந்த 20 வருடங்களாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆனால் covid-19 தொற்று காரணமாக 2020 மற்றும் 21-ல் மாநாடு நடைபெறவில்லை.

சிங்கப்பூரின் Orchard சாலையில் அமைந்துள்ள ஷங்ரில்லா ஹோட்டலில் இன்று தொடங்கும் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. ஜப்பானிய பிரதமர் Fumio Kishida மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுவார். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சீனாவின் தேசிய தற்காப்பு அமைச்சர் ஆசிய-பசிபிக் வட்டார ஒழுங்கு பற்றிய சீனாவின் இலக்கை இவர் விளக்குவார்.