உள்துறை அமைச்சர் கே. சண்முகம் பதில் – உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக சிங்கப்பூருக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரம் இல்லை

File Photo

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதல் குறித்து சிங்கப்பூர் மீது தவறான தகவல் பிரச்சாரங்கள் மற்றும் அத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் Alex Yam உள்துறை அமைச்சர் கே சண்முகத்திடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் கே சண்முகம் எழுத்துப்பூர்வமாக திங்கள்கிழமை (May 9) பதிலளித்தார்.இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக சிங்கப்பூர் மீது ஒரு வினோதமான தகவல் பிரச்சாரத்தைக் கூட அரசாங்கம் கண்டறியவில்லை என்று மே 9 ஆம் தேதியன்று அமைச்சர் கே சண்முகம் தெரிவித்தார்.

ஏப்ரல் 4ஆம் தேதி தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Dennis Tan-ஆல் பாராளுமன்றத்தில் இதேபோல் எழுப்பப்பட்ட கேள்விக்கு தான் பதில் வழங்கியதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு செய்திகள் மற்றும் கருத்துக்களால் மக்களிடத்தில் தாக்கம் ஏற்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் மோதலில் சிங்கப்பூருக்கு எதிரான தகவல்களை அரசாங்கம் கண்டறியவில்லை என்றாலும் ,இரு நாடுகளுக்கிடையேயான போர் குறித்த உள்ளூர் ஆன்லைன் விவாதங்களில் சில சமூகவலைத்தள கணக்குகள் ஈடுபட்டுள்ளதாகவும்,அவை போலியான கணக்குகளாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

“வெளிநாட்டு மூலங்களிலிருந்து தனியாக வெளிவரும் செய்திகள் மற்றும் கருத்துக்கள் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை நாங்கள் கவனித்தோம் ” என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.