தன் 105 கிலோ எடை சாதனையை முறியடிக்க முனைப்பு காட்டும் 60 வயது இளைஞர்… முன்மாதிரியாக திகழும் அமைச்சர் க.சண்முகம்!

shanmugam-personal-best-deadlift
K Shanmugam's Facebook

சிங்கப்பூரின் உள்துறை, சட்ட அமைச்சர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலரான க.சண்முகம், வரவிருக்கும் சமூக நிகழ்வில் அவரின் சாதனையை முறியடிக்க எதிர்பார்ப்புடன் உள்ளார்.

தனது தனிப்பட்ட சாதனையான 105 கிலோ எடை தூக்கியதை விட அதிகமாக தூக்கி சாதனையை முறியடிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக திறக்கப்பட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில் நிலையங்கள் – அலைமோதும் மக்கள் கூட்டம்

இந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள சோங் பாங் ஃபிட்னஸ் ஃபீஸ்டாவில் இந்த முயற்சியை அவர் மேற்கொள்வார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஃபிட்னஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இந்த முயற்ச்சியை மேற்கொள்வதாக ஃபேஸ்புக் பதிவில் சண்முகம் சுட்டிக்காட்டினார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வயது வந்தோர் பிரிவில் போட்டியிடலாம், ஆறு முதல் 17 வயதுடையவர்கள் குழந்தைகள் பிரிவில் போட்டியிடலாம்.

கூடுதல் விவரங்கள்: https://www.onepa.gov.sg/events/chong-pang-sports-fiesta-2022-17462396

ஜாலான் பெசார் சாலையில் காவல்துறை வாகனம் மீது கார் மோதி விபத்து – மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி