36 ஆண்டுச் சிறை வாழ்க்கை ! – இவ்ளோ பில்லியன் வெள்ளி நஷ்டத்தை ஏற்படுத்தி மோசடி செய்தால் இதுதான் கதி!

singapore dollar

சிங்கப்பூரில் மிக மோசமான பங்குச்சந்தை மோசடிக்குக் காரணமாக இருந்த நபருக்கு 36 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மலேசியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஜான் சோ சீ வென் (John Soh Chee Wen) மீது சுமத்தப்பட்ட 180 குற்றச்சாட்டுகள் விசாரணைக்குப் பின்னர் நிரூபிக்கப்பட்டன.

IPCO International நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான குவா சு-லிங் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில் இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சுமார் 200 நாள்களுக்கு வழக்கு விசாரணை நடைபெற்றன.இருவரும் இணைந்து பங்குகளின் விலையை போலியாக உயர்த்தி மோசடி செய்துள்ளனர்.2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ஆம் ஆண்டு அக்டோபர் வரை குவாவும் சோவும் Blumont, Asiasons, LionGold ஆகிய பங்குகளின் விலைகளைச் செயற்கையாக உயர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி அந்த 3 நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிவைச் சந்தித்தன.அவை ஒரு டாலருக்கும் குறைவான மதிப்புடைய Penny பங்குகள் ஆகும்.மேலும்,சட்டவிரோத வர்த்தகத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.அதனால் 8 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.