சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள ஷெங் சியோங்கில் உள்ள ஒரு ATM, ஜூலை 7 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பணப் பரிமாற்றத்தை செயல்படுத்த அனுமதித்தது. ஜூலை 7 மதியம் S$100 NS55 கிரெடிட்களை எடுக்க முடியாமல் இருந்த நிலையில், அன்றிரவே மீண்டும் வேலை செய்தது. PayNow ஆப்ஷன் முழுமையாகச் செயல்பட்டதால், முன்பு மதியம் 1 மணிக்கு காணப்பட்டது போல் எந்த தாமதமும் ஏற்படவில்லை.
ஷெங் சியோங் சூப்பர் மார்க்கெட்டின் சொந்த ATM ஆன, ஷெங் சியோங் சிம்பிள் டெல்லர் மெஷின் ($TM)இல், NS55 S$100 கிரெடிட்களில் S$90ஐப் பெற முடிந்தது என்பதும் ஒவ்வொரு PayNow பரிவர்த்தனைக்கும் சேவை கட்டணம் S$0.20 பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் S$10 மற்றும் S$50 நோட்டுகளை மட்டுமே வழங்க முடியும் என்பதால், S$9.80களை LifeSG செயலியில் மற்ற வணிகர்களிடம் பயன்படுத்த வைத்திருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் S$90 விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. LifeSG செயலியில் S$100 கிரெடிட்களைப் பெற்றவர்கள், பணத்தை எடுக்க $TM இல் QR codeஐ ஸ்கேன் செய்யலாம்.
நாட்டுக்காக சேவை செய்தவர்கள் மே 2022 முதல் அவர்களின் தேசிய சேவை நிலையை அடிப்படையாகக் கொண்டு NSmenபேக்கேஜுக்கு தகுதி பெறுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) முன்பு கூறியிருந்தது. தகுதியான NSmenகளுக்கு ஜூலை 1 முதல் 31 வரை படிப்படியாக வழங்கப்படும் என்றும் அதன் வரவுக்கு SMS ஒன்றைப் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.