மிகப்பெரிய அளவில் வியாபாரம்…ஊழியர்களுக்கு 16 மாதம் வரையிலான போனஸ் – Sheng Siong சூப்பர்மார்கெட்

Sheng Siong reward staff
(PHOTO Credit: TODAY)

மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடந்ததை அடுத்து, Sheng Siong அதன் ஊழியர்களுக்கு 16 மாதங்கள் வரையிலான போனஸை வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TODAY கூறுகையில், தகுதியான ஊழியர்கள் நிறுவனத்தின் லாபத்தில் (வரிக்கு முன்) 20 சதவீதத்தை போனஸாக பெற உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளது.

ஓரினப் புணர்ச்சிக்கு ஆதரவாக போராட்டம் – 3 பேர் கைது

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை குறிப்பிட்ட தொகைகளும், மேலும் மாத போனஸும் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகை இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சர்க்யூட் பிரேக்கர் காலகட்டத்தில், அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நோய் பரவலைத் தடுக்க சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த காலகட்டத்தில், சூப்பர் மார்க்கெட்டுகளில் வியாபாரம் சூடுபிடித்தது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர்.

PHOTO: Today

சிங்கப்பூரில் 3 பேருக்கு புதியவகை B117 தொற்று – Work permit வைத்திருப்பவர் ஒருவர் பாதிப்பு

மேலும், வீடுகளில் சமைத்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் மளிகை பொருட்களின் வியாபாரம் அமோகமாக இருந்தது.

ஆண்டு அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை சுமார் 74.6 சதவீதம் அதிகரித்தது.

சிங்கப்பூரில் 64 கிளைகளை கொண்டுள்ள Sheng Siong சூப்பர் மார்க்கெட், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை S$1.07 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது.

சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லா பேருந்துகள் – முன்பதிவு செய்யலாம்!