மறதியினால் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்போருக்கு உதவும் பேரங்காடி! – ஊழியர்களுக்கு பயிற்சி!

Sheng Siong reward staff
(PHOTO Credit: TODAY)

சிங்கப்பூரில் மறதி நோயுள்ள முதியவர்களுக்கு உதவும் வகையில் NTUC Fairprice,Sheng Siong ஆகிய இரண்டு பேரங்காடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுள்ளனர்.கிட்டத்தட்ட ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

‘Dementia Singapore’ எனப்படும் சிங்கப்பூர் மறதிநோய் சங்கமும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பும் (AIC) பயிற்சி வகுப்புகளை இந்தாண்டு ஜூலை மாதத்திலிருந்து நடத்தி வருகின்றன.மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பேரங்காடிக் கிளைக்கு வந்தால் அவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்று வகுப்புகளில் பயிற்சியளிக்கப்படுகின்றன.

மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல்,அவர்களிடம் தென்படும் அறிகுறி மற்றும் அவர்களிடம் என்ன பேசுவது போன்றவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Fairprice, Sheng Siong ஆகிய நிறுவனங்களின் 200-க்கும் மேற்பட்ட அங்காடிக் கிளைகள் மறதியினால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் நிலையங்களாக நியமிக்கப்பட்டு ‘Go toPoints’ என்று பெயரிடப்பட்டுள்ளன.மறதியினால் வழி தெரியாது இருப்பிடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தால் அவர்களைப் பாதுகாப்பாக ஒப்படைக்கும் முனையங்களாக செயல்படும்.