தெரு நாய்கள் துரத்தியதில் தடுக்கி வடிகாலுக்குள் விழுந்த சைக்கிள் ஓட்டி!

Shipyard Road fall drain
(Photo: Stomp)

சிங்கப்பூரில், தெரு நாய்கள் துரத்தியதில் சைக்கிள் ஓட்டி ஒருவர் தனது சைக்கிளில் இருந்து தவறி வடிகாலுக்குள் விழுந்தார்.

அதனை அடுத்து, அவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், “இப்போ வாங்கிக்கலாம், பணம் லேட்டா கொடுக்கலாம்” திட்டம்!

ஆன்லைனில் பரவி வரும் இந்த சம்பவத்தின் காணொளி மற்றும் புகைப்படங்களை Stomp பகிர்ந்துள்ளது.

அந்த காணொளியில், 2 நாய்கள் இரு சைக்கிள் ஓட்டிகளை துரத்துவதை காணமுடிகிறது. பின்னர் அவர்களில் ஒருவர் சாலையில் விழுந்தார், மற்றொருவர் சாலையோரம் உள்ள குறுகிய வடிகாலுக்குள் விழுந்ததை காண முடிகிறது.

கடந்த பிப்ரவரி 16 நள்ளிரவு 12 மணியளவில் No 49 ஷிப்யார்ட் சாலைக்கு அருகிலுள்ள ஷிப்யார்ட் சாலையில் அவர்களுக்கு உதவி வேண்டி சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) அழைப்பு வந்தது.

SCDF வந்தவுடன், வடிகாலில் ஆடவர் கண்டெடுக்கப்பட்டார் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் பத்திரமாக மீட்கப்பட்டு, இங் டெங் ஃபாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கழிப்பறைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பெண்ணை காணொளி எடுத்த ஆடவர் கைது