ஷூ விற்பனையாளரின் தந்திரம் – மோசடித் தொகையில் ஸ்போர்ட்ஸ் கார்கள் வாங்கிய சிங்கப்பூர் ஜோடி

shoe seller to sports car owner

மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தவறியதால் தலைமறைவான தம்பதிகள் குறித்து கூடுதல் விவரங்கள் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரின் பெயர் கெவின் பை ஜியாபெங் மற்றும் பன்சுக் சிரிவிபா ஆகும்.இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்து இணைந்தனர்.கெவின் வறுமையான பின்னணியைக் கொண்டவர்.அவர் ஷூ விற்பனையாளராக பணிபுரிந்தார்.

 

அவரது மனைவி மிகுந்த வசதி படைத்தவர். S$270,000 மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் காரான மெக்லாரனையும் தம்பதியினர் வாங்கியுள்ளனர்.இந்த ஜோடி S$50 மில்லியன் மதிப்புள்ள குற்றவியல் வருமானத்தை ஈட்டியதாக கூறப்படுகிறது.
கெவின் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மூன்று மாதங்கள் சென்றும் பணத்தை திருப்பி செலுத்தவில்லை.பலரையும் தந்திரமாக இந்த ஜோடி மோசடி செய்துள்ளது.

இது போன்று பெரும்பாலானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.மோசடியில் கிடைத்த பணத்தை வைத்து இரண்டு ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றை வாங்கிக் குவித்து சுகமாறியுள்ளனர்.ஜோடியால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் பல நபர்கள், சொத்தை பார்வையிட்டுள்ளனர்.