கடைக்காரர்களே கவனம்! – சிங்கப்பூரர்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறுவதாக கூறிய அமைச்சர்

TraceTogether data criminal investigations
(PHOTO: Desmond Tan/ Facebook)

சிங்கப்பூரில் புதிய வர்த்தகச் சூழல் நிலவி வருவதால் கடைக்காரர்கள் கவனம் செலுத்துமாறு சிங்கப்பூர் குடியிருப்பு வட்டார நிறுவன உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Tan கூறியுள்ளார்.

கடைகளில் பொருள்களை வாங்கும் நுகர்வோர்களின் விருப்பங்கள் மாறி வருவதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் புதிய வர்த்தகப் போக்குகளைச் சந்திப்பதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் கடைக்காரர்களுக்குச் சிரமம் ஏற்பட்ட போதிலும் வாடிக்கையாளர்களின் மாற்றத்தினால் சிரமம் மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றுக்கு பிறகு நிறைய வாடிக்கையாளர்கள் இணைய வர்த்தகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.இன்னும் சில பேர் நவீனமயமாக்கப் பட்ட கடைத் தொகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.எனவே,குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் இந்தப் போக்கைக் கவனத்தில் கொண்டு தொடர்ந்து நீடித்து நிலைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அமைச்சர் எச்சரித்தார்.இத்தகைய நிலைமையை சமாளிக்க உதவ கடந்த ஆண்டு ஆய்வு ஒன்று தொடங்கப்பட்டது.

இது போன்ற கடைகள் உள்ளூர் சமூகங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.தங்களது வீட்டுக்கு அருகிலேயே வேலை செய்ய விரும்பும் மக்களுக்கும் இவை வேலை வழங்கி உதவுகின்றன என்று கூறினார்.
2600-க்கும் மேற்பட்டோர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

குடியிருப்பாளர்கள்,வர்த்தகத் தலைவர்கள்,கடைக்காரர்கள் ஆகியோரிடம் இருந்து நேர்காணல்கள் வழியாகவும் கருத்துத் திரட்டல் வழியாகவும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.