இவ்வளவு விலை கொடுத்து இந்தப் பையை வாங்கணுமா! – சிங்கப்பூரில் நீடித்த நிலைத் தன்மை உள்ள பைகள் குறித்து கருத்து

Photo: Basis 365
சிங்கப்பூரில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத எளிதில் மக்கிப் போகும் பைகளை உபயோகிக்க வலியுறுத்தப்படுகிறது.இந்நிலையில் நீடித்த நிலைத் தன்மை கொண்ட பைகளை பயன்படுத்த 95 சதவீத சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர்.
அதேவேளையில் அத்தகைய பைகளை வாங்கக் கூடுதல் செலவானால் அவற்றை வங்கப் போவதில்லை என்று 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்தது.

 

சிங்கப்பூரில் KPMG அமைப்புடன் இணைந்து பொட்டலக் கழிவுகள் தொடர்பான மக்களின் கண்ணோட்டத்தைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆய்வில் பங்கெடுத்தனர்.அவர்கள் வெவ்வேறு வருமான நிலை,வயது,வீட்டு வகை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.
நீடித்த நிலைத்தன்மை உள்ள பைகளின் விலை அதிகமாக இருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்க நேரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனவே, உற்பத்தியாளர்கள் பைகளின் விலையை குறைக்க வேண்டும் என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

 

இத்தகைய பைகளின் விலை அதிகமாக இருந்தால் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இது கட்டுப்படியாகாது.இப்பிரிவினர் ஏற்கனவே நிதிச் சுமையை எதிர்கொள்கின்றனர்.எனவே,இங்கு விலைதான் முக்கிய அமசமாகும்.பொருளியல் நெருக்கடியின் போது செலவுகளைக் குறைப்பது மிக முக்கியமாகும்.

 

அனைத்துத் தரப்பினருக்கும் கட்டுப்படியாகும் விலையில் நீடித்தநிலைத்தன்மை உள்ள பைகளை உற்பத்தி செய்யும் வழிகளைப் பற்றி உற்பத்தியாளர்களும் மக்களும் சிந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டது.