வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலைகளை பறித்துக்கொள்வதாக சிங்கப்பூர் ஊழியர்கள் அச்சம்

migrant workers immigration-offenders
(Photo: Mothership)

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலைகளை பறித்துக்கொள்வதாக சிங்கப்பூர் ஊழியர்கள் சிலர் அச்சம் கொள்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

வேலை அல்லது தங்கும் இடங்களுக்கு போட்டி போட வேண்டும் என்று அவர்கள் அச்சம் கொள்கின்றனர். ஆனால் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு மிக முக்கியம் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

கோயில் உண்டியலில் ஆயிரக்கணக்கான பணத்தை திருடிய இருவர் – CCTV காட்சிகளில் பகீர்

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பு சிங்கப்பூர் மக்களுக்கு உதவுவதாகவும், தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் தேவைப்படும் திறமை பற்றாக்குறையை அவர்கள் பூர்த்தி செய்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது சிங்கப்பூரில் பெரிய பன்னாட்டு நிறுவனங்களை விரிப்படுத்தவும், பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிக்கின்றனர், இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக இங்கு வந்து வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்கள் நிறைய தியாகம் செய்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் மிக முக்கியம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று தான்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

40 மீட்டர் உயர டவர் கிரேனில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியருக்கு திடீர் உடல்நலக்குறைவு..